Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்தக் கீரையை மட்டும் சாப்பிடுங்க…” மூட்டு வலி எல்லாம் பறந்து போயிடும்”..!!

முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர்.

முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான்.

காம்புகள் நீண்டு இருக்கும் இலைக் காம்பும் மூன்று பிரிவுகளை பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் ஒன்பது இலைகள் இருக்கும். முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் தாது உப்புகள் குறிப்பிட்ட அளவில் உள்ளது.

மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும்.

முடக்கத்தான் கீரை வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் பிரச்சினை சரியாகும்.

மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகியவற்றுக்கு முடக்கத்தான் கீரை சிறந்த நிவாரணி. இந்த கீரையை சாப்பிட்டால் வாய்வு பிரச்சனை குணமாகும்.

கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டி இருந்தாள் கீரையை சாப்பிட்டால் சுகப்பிரசவமாகும். இதை ஆரம்பித்து சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு பேதி ஆகும்.

ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடும் போது மூளைக்கு நல்ல பலன்தரும்.

முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டு வாதம், மூட்டு வலிகளுக்கு முடக்கத்தான் கீரை சிறந்த மருந்து.

முடக்கத்தான் கீரையைத் துவையல் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம் போன்ற நோய்கள் ஆகியவை குணமாகும்.

Categories

Tech |