இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் என்ன நடக்க போகிறது ? என்பதை ஜூன் மாதமே ஜோதிடர் கணித்தது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
இந்த முறையை ஐபிஎல் போட்டியில் என்ன நடக்கபோகிறது ? என்பதை ஒருவர் ஜூலை மாதமே கூறியுள்ளார். மிதுள் என்ற நபர் ஜூலை 27-ஆம் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பதை குறிப்பிட்டு உள்ளார். இதேபோல பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் மற்றும் விராத் கோலி ஓரளவுக்குத்தான் விளையாடுவார் பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என அனைத்தையும் அப்படியே கண்டித்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஐதராபாத் அணி கோப்பையை வெல்லும் என்பதையும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வேகமாக பரவ அவரது டுவிட்டர் கணக்கில் பின்தொடர்வோர் எண்ணிக்கை மளமளவென எகிரி வருகிறது. இது மட்டுமின்றி 2020 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியே இந்த ஆண்டு வேண்டாம் எனவும், 2021 வரவேண்டுமென விரும்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
https://twitter.com/R3Mitul/status/1287794625831489539
https://twitter.com/R3Mitul/status/1323562258648035328