நீரழிவு பிரச்சனைகளை போக்குவதற்கு இந்த வருண முத்திரை மிகவும் உதவியாக இருக்கும்.
இதற்கு முதலில் விரிப்பை எடுத்து விரித்து அதில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பின்பு சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து ஒன்றுடனொன்று அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். மூன்று விரல்களைக் இடையே இடைவெளி இருக்கக்கூடாது. இரு கைகளையும் இவ்வாறு செய்ய வேண்டும். பத்து முதல் பதினைந்து நிமிடம் வரை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்
பலன்கள்:
நீரிழிவு நீங்கும்.
உடலில் சூடு சமமாகும்.
தோல் பளபளப்பாகும்.
சதை பிடிப்பு நீங்கும்.
முக பருக்கள் வராது.
மனதில் அமைதி ஏற்படும்.
கணையம் மிக சிறப்பாக இயங்கும்.