Categories
உலக செய்திகள்

எல்லாம் தவறான விவாதம்… இப்படி தான் கொரோனா உருவானது… அமெரிக்கா தொற்று நோய் இயக்குனர் விளக்கம்…!!

கொரோனா  தொற்று உருவானது எப்படி என அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குனர் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவாக்கப்பட்டது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ குற்றம் சாட்டி வந்தனர். இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா தொற்று உருவாக்கப்படவில்லை என அறிவியல் ஆதாரங்கள் காட்டுவதாக அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குனர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தோன்றியது குறித்து அரசியல்வாதிகள் மற்றும் நிபுணர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் விவாதம் மிகவும் தவறானது என சாடியுள்ளார். வவ்வால்கள் வைரசின் பரிணாம வளர்ச்சியையும் இப்போது நடந்து கொண்டிருப்பதையும் பார்த்தால் வேண்டுமென்றோ அல்லது செயற்கையாகவோ உருவாக்கப்பட்டதாக இருக்க முடியாது என விஞ்ஞான ஆதாரங்கள் அழுத்தமாக காட்டுகின்றது. காலம் மாற மாற பரிணாமம் குறித்த அனைத்தும் இந்தக் கொரோனா இயற்கையாகவே உருவாகி உயிரினங்களுக்கு பரவியிருப்பதை திட்டவட்டமாக காட்டுகின்றது என ஆண்டனி கூறியுள்ளார்.

Categories

Tech |