Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் போயிடுவேனு நெனச்சவருக்கு… அடிச்சது லக்கு… கேப்டனான அனிதா சம்பத்..!!

இன்று நடைபெற்ற தலைவர் தேர்தல் போட்டியில் நிஷா மற்றும் அனிதா இருவருக்கிடையேயான டாஸ்க்கில் அனிதா சரியாக பதில் கூறி இந்த வார தலைவரானார்.

இந்த சீசனில் முதல் முறையாக இந்த வீட்டில் இருக்கும் அனைவரும் கேப்டன் டாஸ்க்கில் பங்கு பெறலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். வழக்கமாக சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் சிறந்ததாக செயல்பட்ட மூன்று அல்லது நான்கு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பிக்பாஸ் போட்டியின் அடுத்த வாரம் தலைவர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் இந்த முறை அனைவரும் தலைவர்கள் பங்கேற்க பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து இரண்டு பக்கம் 2 திரையில் படம் ஒளிபரப்பப்பட்டு இருக்கும். அதில் ஒவ்வொரு திரைக்கும் ஒரு நபர் என்று முதலில் விளையாட வேண்டும்.

இதில் யார் இறுதிவரை விளையாடுகிறார்கலோ அவர்களே இந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அனைவரும் வரிசையாக வந்து விளையாடி வந்தனர். இறுதியாக நிஷா மற்றும் அனிதாவே கடைசி வரை வந்தனர். அப்போது திரையில் மஞ்சள் நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் பலூன்கள் காட்டப்பட்டது. இதில் அதிக அளவு எந்த பலூன்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அனிதா மஞ்சள் என்று பதிலளிக்க அது சரியான பதிலாகவே அவரே இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருந்தா அனிதா அனைவரையும் கட்டியணைத்து மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த வாரங்களில் இந்த வீட்டிலிருந்து வெளியேற போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த அனிதா, இந்த வார கேப்டன் டாஸ்க்கில் பங்குபெற்று வெற்றி பெற்றதால் இன்னும் சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார் என்பது உறுதியானது.

Categories

Tech |