பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வார புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், இந்த சீரியலின் இந்தவார ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த புரோமோவில் கண்ணம்மாவை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட வெண்பா மிரட்டுகிறார். ஆனால், தன் குழந்தை யார் என்று தெரிந்துகொண்ட கண்ணம்மா, வெண்பாவை மிரட்டுகிறார். கண்ணம்மாவின் புது தோற்றத்தை பார்த்து மிரண்டுபோய் வெண்பா திரும்பி செல்கிறார். இந்த ப்ரோமாவை பார்த்த ரசிகர்கள் இந்த எபிசோடுக்காக காத்திருக்கின்றனர்.