ராமநாதபுரம் மாவட்டத்தில் நகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகளை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜவுளி கடை மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஜவுளிக்கடை நகைக்கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் ஜவுளி வியாபாரிகள் மகாலில் வைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஜபருல்லாகான் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் பொது செயலாளர் ராசி போஸ், ராமன் செட்டியார், பிரகாசம், பொருளாளர் சுப்பையா, இணை செயலாளர் மணிவண்ணன், துணைத்தலைவர் வைரம் ஜீவானந்தம், உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து ஜவுளி கடைகள், நகை கடைகள் திறக்கப்படாததால் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களில் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே கடைகளை திறக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.