கொரோனாவை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர் தான் ஊரடங்கு என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது, இது ஒரு புதிய நோய். இந்த நோய் வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள் மூலமாக தான் தமிழகத்திலே இந்த நோய் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் வந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களை கண்டறிந்து குணப்படுத்துகின்றோம். கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள், கொரோனா பதித்தவர்கள் யார் யாரோடு தொடர்பில் இருந்தார்களோ அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காப்பாற்றி வருகின்றோம்.
இந்த நோய்க்கு உலகிலேயே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம்முடைய மருத்துவரின் கடும் முயற்சியின் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிறப்பான முறையிலே சிகிச்சை அளித்தும் காரணத்தினாலே இன்னைக்கு குணமடைந்து எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் இருக்கின்றது. இருந்தாலும் மக்களுக்கு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது.
உள்ளாட்சித் துறை, காவல்துறை வீதிவீதியாக ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல மத்திய அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை இடங்களும் அரசு அமல்படுத்தி, மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கான வழிவகை செய்யப்பட்டு, அதன் மூலமாக கொரோனா பரவலை தடுக்கும் வழிகளை மேற்கொண்டுள்ளோம்.கொரோனா பரவலை தடுப்பதற்கு தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கு எப்படி ஸ்பீட் பிரேக்கர் இருக்கின்றதோ அதே போல, கொரோனாவை தடுப்பதற்கான ஸ்பீட் பிரேக்கர் தான் ஊரடங்கு என்று தமிழக முதல்வர் எடடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.