Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யய்யோ…! கண்டிப்பா நடக்குமாமே… அடித்துச் சொல்லும் மாஜி அமைச்சர் …!!

தமிழகத்தில் விலையேற்றம், வரி உயர்வு கண்டிப்பாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெள்ளை அறிக்கையில் 2006இல் இருந்து இவர்கள் கணக்கெடுக்கின்றார்கள். 2001 எடுங்க, 1996எடுங்க. 1996 – 2001இல் கஜானாவும் காலி. ஒட்டுமொத்தமாக காலி செய்து விட்டு தான் திமுக போச்சு. 2001இல் அம்மா வந்த பிறகு தான் கருவூலத்தை நிரப்பினார்கள்.

அப்படி நிரப்பி பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அதேபோன்று அரசு கருவூலம் எல்லாமே நிதிநிலைமை நல்லா இருந்துச்சு. அதனுடைய தாக்கம் தான் என்ன ஆச்சு ? 2006இல் இவர்கள் ஆட்சிக்கு வரும்போது அதனுடைய வெளிப்பாடுதான் அந்த மூன்று வருஷம்….. நாங்க நிதி நிலைமையை மேம்படுத்தியதால் அந்த மூணு வருஷம் மாநில  நிதிநிலைமை நல்லா இருந்துச்சு. ஆனா 2009 – 2010இல் பாருங்க….

அப்படியே சரிஞ்சி இருக்கும். பிறகு தான் இவர்களின் இயலாமை, திறமையின்மை எல்லாமே அப்புறம் வெளிப்பட்டு விட்டது. அதனால நான் என்ன சொல்றேன்னா….  நீங்க எடுக்குறீங்க ? 2001 இலிருந்து எடுங்க….  1996 லிருந்து எடுங்க…  இதையெல்லாம் மறைச்சிட்டு  2001- 2006 அம்மாவால வளர்ச்சி ஏற்பட்டது மட்டும் காட்டிட்டு, அதுக்கப்புறம் எங்களை குறை சொல்றது உள்நோக்கத்தோடு குறை சொல்லுறாங்க.

நிதியமைச்சர் உடைய வெள்ளை அறிக்கை ஸ்டேட்மெண்ட் பார்க்கும்பொழுது என்ன தெரிகிறது என்றால்…. அதாவது நீங்க ஏன் பஸ் கட்டணத்தை ஏற்றவில்லை ? நீங்க ஏன் மின்சார கட்டணத்தை ஏற்றவில்லை ? நீங்க ஏன் சொத்துவரியை ஏற்றவில்லை…  மக்கள் அரசு இது. ஆனால் ஏற்றாமல் சிறந்த நிர்வாகம் பண்ணி,  எந்த ஒரு செக்கும்  ஏதாவது திரும்பி வந்ததா  ரிசர்வ் வங்கியில் இருந்து…. ரிசர்வ் வங்கியிலிருந்து வந்துச்சா சம்பளம் கொடுக்க முடியலன்னு….  மேனேஜ் பண்ணுனோம்ல… அந்த சாமர்த்தியம் இருக்குல…

அதையே நீங்க ஏன் குறையாக  சொல்றீங்க ?அப்போ உங்க எண்ணம் என்னென்ன  அவங்க செய்யல..  பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை, நாங்க ஏத்த போறோம். அவங்க செய்யல….  மின்சாரக் கட்டணத்தை நாங்க ஏத்த போறோம், அவங்க சொத்து வரியை ஏத்தல,  நாங்க சொத்து வரியை உயர்த்த போறோம். இப்படி பண்றதுக்கு தான் வெள்ளை அறிக்கை கொடுது தயார் பண்றாங்க… நடக்கும் பாருங்க…. கண்டிப்பா நடக்கும்….நடக்கவில்லை என்றால் நீங்க எங்கிட்ட கேளுங்க ஏன் நடக்கவில்லை என ? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

Categories

Tech |