காலணியை அணிந்து பரிசோதனை செய்தால் அதற்கு நான்கு லட்சம் சம்பளம் வழங்குகிறார்கள்.
கொரோனா காலத்தில் வேலையை இழந்து பல அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடி வருகின்றனர். இக்காலகட்டத்தில் பலரின் பொருளாதார வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகின்றது. பல உலக நாடுகள் கொரோனா அச்சத்தால் தவித்து வருகின்றனர். பல மில்லியன் மக்கள் வீடற்ற நிலையில் உள்ளனர். ஆனால் வீட்டில் உட்கார்ந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க கூடிய வேலை வாய்ப்பு ஒன்று உள்ளது. அது என்னவென்றால் காலனி சோதனையாளர் வேலை. ஒரு மாதத்திற்கு மில்லியன் ரூபாய் சம்பாதிக்க முடியும்.
நீங்கள் காலணியை அணிந்து அது வசதியாக இருக்கிறதா இல்லையா என்பதை கூற வேண்டும். அந்த வேலைக்கு அந்நிறுவனம் உங்களுக்கு 4 லட்சம் சம்பளம் கொடுக்கும். இங்கிலாந்தை சேர்ந்த Bedroom athletics என்ற நிறுவனம் காலனி சோதனையாளர் வேலையை வெளியிட்டுள்ளது. நீங்கள் வேலையில் சேர விரும்பினால் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் 2 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தேவை. இந்த வேலையில் மாதத்திற்கு இரண்டு நாட்கள் சோதனை செய்ய வேண்டும். அந்நிறுவனத்தின் காலணிகளை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அணிந்தால் 4 லட்சம் சம்பளம் கிடைக்கும்.