நடிகர் சூரி உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது ‘விடுதலை’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனால் நடிகர் சூரி தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, “உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது. உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது. உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!🙏💐 pic.twitter.com/4fYhrcLkiF
— Actor Soori (@sooriofficial) May 1, 2021