Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை சேர்ந்த எழுத்தாளர்..! இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா என்பவருக்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இயற்பியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயற்பியல், மருத்துவம் நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் அறிவிக்கப்பட்டது.

அதில் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், தான்சானியா நாட்டை சேர்ந்தவருமான எழுத்தாளர் அப்துல் ரஷாக் குர்னா என்பவருக்கு 2021-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்துல் ரசாக் குர்னா தனது 21 வயதில் இருந்தே பல நாவல்களையும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |