பிக் பாஸ் சீசன் 5இல் இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. தற்போது இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கான புரமோவும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பிக்பாஸ்5 இல் பங்கேற்க உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. அந்த வகையில் பிரபல இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ்5 இல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.