Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இது எப்படி நடந்திருக்கும்” தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் பின்னால் உள்ள வயல் பகுதியில் திடீரென பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஶ்ரீபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அலுவலகத்தின் பின்னால் உள்ள வயல் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |