Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கட்டுக்குள் வரவே இல்லை” தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திடீரென பற்றி எரிந்த தீயால் சாலை முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராமையன்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் 55 வார்டுகளில் உள்ள குப்பைகளை  சேகரித்து லாரிகள் மூலம் அங்கு  கொட்டப்படுகிறது. இந்நிலையில் இங்கு அதிகமான குப்பை கொட்டப்படுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து நேற்று மாலையில் திடீரென குப்பை கிடங்கில் மளமளவென தீ பற்றி எரிந்தது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர் மூலம் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் மண்ணள்ளிப் போட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீ கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Categories

Tech |