மெக்சிகோவிலுள்ள சிறைச்சாலையின் முன்பாக திட்டமிட்டு 2 கார் குண்டுகளை வெடிக்கச் செய்த ரவுடிக் கும்பல்கள் அங்கிருந்த 9 கைதிகளை தப்பிக்க செய்துள்ளார்கள்.
மெக்சிகோவில் ஹிடால்கோ என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள சிறைச்சாலையின் முன்பாக ரவுடிக் கும்பல்கள் தன்னுடைய தலைவனை வெளிக்கொணர திட்டமிட்டு 2 கார் குண்டுகளை வெடிக்க செய்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி சிறையின் முன்பாக காவலுக்கு நின்று கொண்டிருந்த 2 போலீசையும் துப்பாக்கியை கொண்டு சுட்டு கொலை செய்துள்ளார்கள்.
இதனால் சம்பவ இடத்திற்கு முன்பாக சிறைச்சாலையிலுள்ள காவல்துறை அதிகாரிகள் குவிந்துள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திய ரவுடிக் கும்பல்கள் சிறையிலிருந்து தனது தலைவன் உட்பட 9 கைதிகளை தப்பிக்க செய்துள்ளார்கள்.