குழந்தைகளுக்கு மிகவும் சுவையான, ஆரோகியமான ஸ்நாக்ஸ், மிகவும் எளிமையான முறையில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – அரை கப்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 4
கொத்தமல்லி இலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் அரை கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்து கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்கு கலக்கவேண்டும் ரொம்ப கெட்டியாக இல்லாமல் சப்பாத்திமாவுபதத்தில் பிசைந்து எடுத்து கொள்ளுங்கள். சரியான பதத்தில் இருந்தால்தான் ஸ்னாக்ஸ் மொறுமொறுப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
பின்னர் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த கலவையை சிறிது சிறிதாக உருட்டி எண்ணெயில் போட வேண்டும். அதிகபட்சம் ஒரு நிமிடம் நன்கு வேகவிடுங்கள். பிறகு பொரித்தெடுத்து அதை எண்ணெய் இல்லாமல் வடிகட்டி பரிமாறுங்கள். மிகவும் சுவையான கோதுமை துணுக்கு ரெடி…!