சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் தஞ்சை தெற்குவீதி, மானோஜிப்பட்டி, ஒரத்தநாடு, வில்வராயன்பட்டி, மருங்குளம், பிள்ளையார்பட்டி, நெய்குப்பை, பாபநாசம் உட்பட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 543 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.