Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர தேடுதல் வேட்டை…. வசமாக சிக்கிய 13 பேர்…. கைது செய்த போலீஸ்…..!!

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பழைய குற்றவாளிகள், தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி இந்த மாவட்டத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியபோது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று 30 பழங்குற்றவாளிகள் நன்னடத்தை சான்று அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேக நபர்கள் 37 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின் மாவட்டம் முழுவதும் 288 தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் ஒரே நாள் இரவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,658 வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆகவே இதுபோன்ற தீவிர கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று குற்ற சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |