Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நீ கொடுக்க கூடாது…. தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தொழிலதிபரை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பால்நல்லூர் திருவீதி அம்மன் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கட்டுமான வேலைக்கு பொருட்களை கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து பால்நல்லூரில் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கட்டுமான வேலைக்கு ஆனந்தன் பொருட்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் அந்தத் தொழிற்சாலைக்கு நீ பொருட்களை வழங்கக் கூடாது என்றும் நாங்கள் தான் வழங்குவோம் என்றும் மிரட்டி வந்தனர்.

இதனையடுத்து தனியாகச் சென்ற ஆனந்தனை  மணிமாறன், ஜெகநாதன் மற்றும்  அரவிந்தன் வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததோடு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், மணிமாறன் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு தலைமறைவாக உள்ள ஜெகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |