Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஒரு லட்சம் நபர்களுக்கு போடணும்…. தீவிரமாக நடைபெற்ற முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

6-ஆவது கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட தடுப்பூசி போடும் முகாமானது தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முகாம் மொத்தமாக 917 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குழுவின் மூன்றாவது அலை தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்பின் தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதோடு இத்திட்டத்தை 1௦௦ % அளவில் செயல்படுத்தும் விதமாக இம்மாவட்டத்தில் கடந்த ஐந்து வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதில் 4, 41, 528 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து தற்போது நடக்கும் முகாம்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இவற்றில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. பின் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது எனவும் மாமிசம் உண்பவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு எந்த விதமான உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என கலெக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |