Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

தளபதியின் “வாரிசு” வெற்றிபெற…. சபரிமலைக்கு சென்று ரசிகர்கள் செய்த காரியம்…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் “வாரிசு” மற்றும் அஜித்தின் “துணிவு” படங்கள் 8 வருடங்களுக்கு பின் நேரடியாக மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2 நடிகர்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சுபாஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று, அங்கே பதினெட்டாம்படி அருகில் இந்த பட பேனரை வைத்து உயர்த்தி பிடித்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அத்துடன் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

Categories

Tech |