தோண்டப்பட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கின்றது . இங்கு பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலைகளில் தார் ரோடு போடப்படாமல் பல்வேறு தெருக்கள் இருக்கின்றது. இதனையடுத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து சாலைகள் பள்ளமாக இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலையின் பள்ளங்களில் சேரும் சகதியுமாக இருப்பதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கின்றது. திருப்பத்தூர் கச்சேரி தெரு, செட்டித்தெரு, முத்துக்குமாரசாமி கோவில் தெரு, மருத்துவர் தெரு, சிவராவ் தெரு போன்ற பல்வேறு பகுதிகள் மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே பாதாள சாக்கடையின் பணிகளையும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டி வைக்கப்பட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.