Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. நீர்வரத்து அதிகரிப்பு…. பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு….!!

தொடர் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பதை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற நீராதாரங்களை ஆதாரமாக வைத்து அமராவதி அணை கட்டப்பட்டிருக்கிறது. இதில் கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநில வனப்பகுதியில் உற்பத்தி ஆகின்ற தேனாறு உள்பட 4 ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அழித்து வருகின்றது. இதனை ஆதாரமாக வைத்து கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.

இந்நிலையில் பழைய அணைக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய அணைக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகின்றது. இதில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் வனப்பகுதியில் இருக்கும் மறையூர் உள்பட 4 அணையின் நீர் ஆதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே இந்த ஆறுகளில் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து தற்போது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 8 மதகுகள் வழியாக அமராவதி ஆற்றில் 10 ஆயிரம் கன அடியும் மற்றும் பிரதான கால்வாயில் 1௦௦ கன அடி தண்ணீரும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே வானம் மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்ததற்கான சூழலும் தற்போது நிலை வருகிறது. இதனால் அணைக்கு ஏற்பட்ட நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு மூலமாக உபரி நீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Categories

Tech |