தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெருக்கள் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. அதன்பின் குளம் மற்றும் ஏரி கரைகளில் மலை காரணத்தினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது.
இதனால் மூங்கில்துறைப்பட்டு, அதன் சுற்றுவட்டாரங்களில் மூன்று மாதங்களுக்கு முன்பாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனையடுத்து சில பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்தும் வருகின்றது. இதனை தொடர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாகுபடி செய்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் அனைவரும் பெரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.