Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்த கனமழை…. தண்ணீரில் மூழ்கிய கடைகள்…. சிரமத்தில் வியாபாரிகள்….!!

தொடர்ந்து பெய்த கனமழையில் சாலையோரம் இருந்த காய்கறி கடைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பாக கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ஆற்காடு நகர் பகுதியில் இருந்து மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள் பைபாஸ் சாலையில் உள்ள ஆற்றின் கரையோரம் அமைத்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து பாலாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணத்தினால் சாலையில் அமைந்திருந்த காய்கறி கடைகள் நடைபெறும் இடங்கள் முழுவதுமாக வெள்ளநீர் செல்வதினால் அங்கு அனைத்து கடைகளும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனை தொடர்ந்து தற்காலிகமாக ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |