தொடர்ந்து பெய்த கன மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை மற்றும் பாலாற்றில் தொடர்ந்து பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர் காரணத்தினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி அருகாமையில் இருக்கும் பகுதியில் 60 அடி ஆழத்தில் இருந்த கிணற்று நீர் மட்டமானது தற்போது கைக்கு எட்டும் நிலைக்கு உயர்ந்திருப்பதை படத்தில் காணமுடிகிறது.