Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம்…. அவதிப்படும் வாகன ஓட்டுநர்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

வானத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென பல பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் லேசான தூரல் உடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கழிவுநீரும் ஒன்றாக கலந்து குளம் போல் தேங்கி நின்றுள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை போல் சேலம் மெயின் ரோடு மற்றும் காந்தி ரோடு ஆகிய சாலைகளில் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால் வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனை அடுத்து இம்மாவட்டம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |