Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்த கனமழை…. உடைந்த விழுந்த தடுப்பணைகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தொடர் கனமழை காரணத்தினால் தடுப்பணைகள் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் பிரசித்தி வாய்ந்த யோக நரசிம்மர் கோவில் 493 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இப்பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகுவதை தடுப்பதற்காகவும், குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும், அதை பயன்படும் வகையிலும் மலைப்பகுதியில் ஆற்காடு வனசரகம் சார்பாக 2003-2004-ஆம் ஆண்டு இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு இருக்கிறது.

இதனை அடுத்து இந்த தடுப்பணைகள் மழை காலங்களில் நிரம்புவதால் காட்டுப்பன்றி மற்றும் குரங்குகள் போன்ற வனவிலங்குகள் மற்றும் ஆடு மாடுகளுக்கு நீராதாரமாக விளங்கி வந்தது. ஆனால் தற்போது பெய்த தொடர் கனமழை காரணத்தினால் இரண்டு தடுப்பணைகள் நிரம்பி திடீரென உடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதனால் தடுப்பணையில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |