சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டுப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்த காரணத்தால் தெருக்கள் மற்றும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது.
அதன்பின் காவல்நிலையம் எதிராக மழைநீர் குளம்போல் தேங்கி நின்ற காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.