தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரம் குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக 28 ஆம் தேதியான இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதனைப் போலவே நாளை (29) மற்றும் நாளை மறுநாள் (30) தென் தமிழகம், தஞ்சாவூர்,திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பொழியும் என்றும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
31 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்நாட்களில் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலையே காணப்படும்.என்று சென்னை வானிலை மையம்தெரிவித்துள்ளது .