Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கவில்லை…. தொடர்ந்து எரியும் குப்பைகள்….. பொதுமக்கள் கோரிக்கை….!!

குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ எரிவதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் குப்பை கிடங்கு பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்கு உள்பட்ட 51- வது வார்டு பகுதியில் இருக்கும் அனைத்து குப்பைகளும் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். அதன்பின் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் குப்பை கிடங்கு இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பின்னர் மூன்று நாட்களாக எரிந்து வரும் குப்பை கிடங்கை அணைக்க தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் குப்பை கிடங்கில் இருந்து வரும் தீயை அணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |