தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது.
அதன்பின் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனைத் தொடர்ந்து அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 68 மில்லி மீட்டரும் மற்றும் குறைந்த பட்சமாக லாகூரில் 7.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.