Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் மணல் கொள்ளை…. பொதுமக்கள் குற்றச்சாட்டு…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூரில் உள்ள பாலாற்றின் கரையோரத்தில் இருக்கும் பகுதிகளில் மண் சாலை ஏற்படுத்தி லாரி, மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலமாக பகல், இரவு என பாராமல் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணத்தினால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது வரை தண்ணீர் செல்கிறது. இதனால் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் ஒரு யூனிட் மணல் 12,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து பல ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் மணல் திருடி வந்த நிலையில் தற்போது ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக உதயேந்திரம் மற்றும் கச்சேரி சாலை ஆகியவற்றின் மறு கரையில் இருக்கும் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக தங்களது சொந்த செலவில் மண் சாலை அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது இயற்கையான ஆற்றின் நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகின்றது. பின்னர் இப்பகுதியில் பல லட்சம் யூனிட் மணல் இதுவரை திருட பட்டிருப்பதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து பகல், இரவு பாராமல் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |