பயங்கரவாத அமைப்பினருக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருவதால் தொடர்ந்து மோசமான பட்டியலில் உள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் FATF என்ற சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு மையத்தின் தலைமை இடம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பினருக்கு நிதி உதவி அளிப்பது, சட்டத்திற்கு புறம்பாக பணம் பரிமாற்றம் செய்வது போன்ற செயல்களில் அதிக அளவில் ஈடுபடும் நாடுகளை கண்காணித்து அதனை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கின்றனர். இந்த அமைப்பு அளிக்கும் உத்தரவை நிறைவேற்றும் வரை அந்த நாடுகள் அனைத்தும் ‘கிரே லிஸ்ட்’ என்று கூறப்படும் மோசமான பட்டியலில் இருக்கும்.
இதனால் அந்நாட்டிற்கு உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி கிடைப்பதில் இன்னல் ஏற்படும். இதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் மோசமான பட்டியலில் உள்ளது. குறிப்பாக இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் போன்றோருக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான் பாகிஸ்தான் மோசமான பட்டியலில் இருந்து நீக்கப்படும். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக 30 விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதில் பாகிஸ்தான் 26 நடவடிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தினால் தொடர்ந்து மோசமான பட்டியலில் இடம் வகிக்கிறது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பயங்கரவாத நிதி நடவடிக்கை கண்காணிப்பு தலைவரான மார்கஸ் பிளேயர் பேட்டி அளித்ததில் ” லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா மற்றும் தலீபான் போன்ற பயங்கரவாத அமைப்பினருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் அந்நாட்டை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் பாகிஸ்தானை போன்று ஜோர்டான், மாலி, துருக்கி போன்ற நாடுகளும் மோசமான பட்டியலில் உள்ளது.