Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதுக்கு உடம்பு சரியில்லை… போராடி பிடித்த வனத்துறையினர்… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

விவசாய தோட்டத்தில் அட்டகாசம் செய்த நோயுற்ற பெண் யானையை வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் பல விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒரு காட்டு யானை அந்த தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரம், வாழைத்தார் போன்ற மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த யானையை அகழி தோண்டியும், பட்டாசு வெடித்தும் விரட்டி உள்ளனர். ஆனால் அந்த யானை மீண்டும் விவசாய தோட்டத்திற்குள்  நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த யானையை பார்த்த போது அது நோயுற்ற பெண் யானை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்லை கால்நடை மருத்துவரை அழைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் சிகிச்சைக்கு பிறகு யானை மிரண்டு ஓடாத படி  கண்களில் துணி போட்டு கட்டியுள்ளனர். மேலும் யானை மயக்கத்திலிருந்து தெளிந்து பூரண குணமடைந்த பின் ஆலோசனை நடத்தி அதனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |