தொடர்ந்து பெய்யும் கனமழையினால் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீனா நாட்டில் ஷாங்க்சி என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பொழிந்து வருவதால் அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன. மேலும் வெள்ளமானது சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக இந்த வெள்ளத்தினால் 17,000த்திற்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குறிப்பாக கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களால் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள 1,20,000 மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.