Categories
சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து சாமி தரிசனம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி….. இப்போ எந்த கோயிலுக்கு தெரியுமா?….. வைரல் புகைப்படம்….!!!!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இதுரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மீண்டும் சினிமாவில் பல படங்கள் இயக்கப் போவதாக ஐஸ்வர்யா ரஜினி கூறிவருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தான் சைக்கிளில் ஒர்க்அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து சில பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |