தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஜெயக்குமார் என்பதும், ஆம்பூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 7-பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.