Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தொடர்ந்து இப்படி பண்றீங்க…. இனி தப்பிக்கவே முடியாது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் மர்ம நபர்கள் சிலர் தனியாகச் செல்லும் பெண்களிடம் நகையை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. இந்நிலையில் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது நகையை பறித்துச் சென்றனர். இதனையடுத்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யக்கோரி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது சத்துவாச்சாரி பகுதியில் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவத்தை பற்றி தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி அங்கு இருக்கக்கூடிய சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்மநபர்கள் தங்களது முகத்தை மறைத்து ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே காவல்துறையினர் அவர்களது உடையை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பிள்ளையார்குப்பம், பூட்டுத்தாக்கு, விஷாரம், ஆற்காடு, மாசாபேட்டை, புங்கனூர், நாயக்கன்தோப்பு, கண்ணமங்கலம், சாத்துமதுரை, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அணைக்கட்டு புதுமனை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, குடியாத்தம் கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்து சுமார் 57 பவுன் நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் இருக்கும். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது கைது செய்யப்பட்ட 2  பேரும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் நகையை பறித்துள்ளனர். எனவே சுப்பிரமண, ஜார்ஜ் ஆகிய 2 பேரையும் சிறைச்சாலையில் அடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளார். இவர்கள் 16 நகை பறிப்பு வழக்குகளில் ஈடுபட்டு அதில் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். எனவே மீதமிருக்கும் நகைகளில் குற்றவாளிகள் யாரிடம் விற்றனர், வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு 2 கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |