Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. கால்நடைகளுக்கு நேர்ந்த சோகம்…. கவலையில் விவசாயிகள்….!!

தொடர் மழையின் காரணமாக 4 பசுமாடுகள் மற்றும் 2 ஆடுகள் இறந்ததால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா, இடையிறுப்பு மற்றும் சங்கராம்பேட்டை கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது இடையிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், கார்த்திக், சோமு ஆகியோருடைய பசுமாடுகள் தொடர்ந்து உயிரிழந்தது. இதனையடுத்து ஒன்பத்துவேலி ஊராட்சி, சங்கராம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சாவித்ரிசின்னப்பன் என்பவரது பசுமாடும் இறந்துவிட்டது.

மேலும் அதே ஊரை சேர்ந்த ஜெயாகந்தசாமி என்பவரது 2 ஆடுகளும் இறந்துவிட்டது. இவ்வாறு இடையிறுப்பு, ஒன்பத்துவேலி ஊராட்சி பகுதியில் மர்மநோய் தாக்குதலால் இதுவரை 4 பசுமாடுகள், 2 ஆடுகள் தொடர்ந்து இறந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். ஆகவே மர்ம நோய் தாக்குதல் காரணமாக கால்நடைகள் இறந்ததா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |