தொகுப்பாளர் குரு தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .
கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுபநிகழ்ச்சிகளை தள்ளி வைத்திருந்தனர் . தற்போது ஊரடங்கு தளர்வுபடுத்தப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர் . இந்நிலையில் தொகுப்பாளரும் நடிகருமான குருவுக்கு நாளை (பிப்ரவரி 3) திருமணம் நடைபெற உள்ளது . சென்னையைச் சேர்ந்த தொகுப்பாளர் குரு சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக ‘மதராசி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கினார் . இதையடுத்து இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார் .
இதன்பின்னர் குரு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் . மேலும் இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நாளை திருமணம் செய்ய உள்ள குரு தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .