நடிகை லட்சுமிமேனன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் லட்சுமிமேனன் இளம் கதாநாயகியாக கலக்கி வந்தவர் . இவர் நடிப்பில் வெளியான கும்கி , சுந்தரபாண்டியன் ஆகிய படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . இதனால் லட்சுமி மேனன் சினிமா துறையில் இருந்து சற்று விலகி படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் . இதையடுத்து உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி மாறிய லட்சுமி மேனன் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இதன்பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக பரவிய தகவல் வதந்தி எனக் கூறினார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் நடிகை லட்சுமிமேனன் கலந்து கொண்டுள்ளார். தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை லட்சுமிமேனனின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.