நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி சுமார் 7,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கரினா நெபுலாவை படம் பிடித்துள்ளது.
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹப்பிள் தொலைநோக்கி தற்போது சுமார் 7,500 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருக்கும் கரினா நெபுலாவை படம் பிடித்துள்ளது. இதனையடுத்து கரினா நெபுலா பெரும்பாலும் ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்டிருப்பதாகவும், இதனுடைய சிக்கலான வாயு கட்டமைப்புகளையும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கரினா நெபுலா என்பது தூசியால் மூடப்பட்ட ஹைட்ரஜன் வாயுவினுடைய குளிர்ந்த மேகம் என்பதையும் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளத. இந்த வீடியோ இணையதளத்தில் ஜூன் 8 ஆம் தேதி பகிரப்பட்டதையடுத்து தற்போது வரை இணையதள வாசிகளால் ஆச்சரியம் மிகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.