Categories
உலக செய்திகள்

‘பெண்கள் நடிக்க கூடாது’…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. ஈரான் அரசு நடவடிக்கை….!!

தொலைக்காட்சியில் நடிக்கும் பெண்களுக்கென சில புதிய கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது.

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் தொலைக்காட்சியில் நடிக்கும் பெண்களுக்கென புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் “பெண்கள் சிவப்பு நிறத்திலான எந்தவொரு  உணவையும் உட்கொள்ளக்கூடாது.  மேலும் அவர்கள் கைகளில் எப்பொழுதும் கையுறைகளை அணிந்து இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக பெண்களுக்கு ஆண்கள் தேநீர் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பீட்சா, சாண்ட்விச் போன்ற துரித உணவுகளை பெண்கள் சாப்பிடுவது போன்று காண்பித்தல் கூடாது. குறிப்பாக பாலின உறவுகளை தூண்டும் விதமாக இருக்கும் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை இதனை கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டிய சூழல் உருவாகினால் ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பு நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுவோருக்கு பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் பிஜன் பிராங் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தற்போது உள்ள சூழலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெளியிடுவதே பெரும் கடினமாக உள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பெண்களை அடக்குவது போன்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |