வெளிநாடுகளில் தங்களுக்கு தேவையான தொழிலை பயின்று கன்னடாவில் பணிபுரிய நினைக்கும் நபர்களுக்கான தடைச்சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் நீக்கும் படியான சட்டத்தை பிறப்பிக்கவுள்ளது.
கனடா நாட்டிற்குள் புலம் பெயர்வோர்கள் அங்கு தங்களது தொழிலை தொடங்குவதற்கு பல தடைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளில் தங்களுக்கு தேவையான தொழிலை பயின்று கனடாவிற்குள் நுழையும் நபர்கள் அந்நாட்டில் தன் பணியை தொடங்குவதற்கான தடைகளை நீக்கும் படியான சட்டத்தை கனடா அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது.
இதனையடுத்து மேற்குறிப்பிட்டுள்ள சட்டத்தை கனடா அரசாங்கம் நிறைவேற்றினால் வெளிநாடுகளில் தொழிலை பயின்று கனடாவில் பணி புரிய நினைக்கும் நபர்கள் அதற்கான உரிமத்தை பெறுவது மிகவும் எளிதான செயலாக அமையுமென்றும் கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி மேலே குறிப்பிட்டுள்ள சட்டம் ஆசிரியர்கள், என்ஜினியர்கள் உட்பட சில முக்கிய தொழிலாளர்களுக்கு மட்டுமே தவிர மருத்துவத்துறை சார்ந்த நபர்களுக்கு கிடையாது என்றும் கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.