Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழில் போட்டியில்… கொலை செய்யப்பட்ட பெண்… மளிகைக்கடைக்காரர் கைது…!!

மொபட்டில் சென்ற பெண் மீது காரை மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தும்பலப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் கருப்பசாமி- லட்சுமி .லட்சுமி அப்பகுதியில்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்  சந்தையில் கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மொபட்டில் லட்சுமி ஊருக்கு திரும்பி  கொண்டிருந்தார்.அப்போது  குண்டடம்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் அவரது மொபட்டின்  மீது  பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மொபட்டில் மோதிய கார் லட்சுமி மளிகைக் கடையின் அருகே மற்றொரு மளிகை கடை நடத்தி வரும் மயில்சாமிக்கு சொந்தமானது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில்  மயில்சாமியை பிடித்து காவல்துறையினர் விசாரித்தபோது தொழில் போட்டி காரணமாக  லட்சுமி சென்ற மொபட் மீது காரை மோதி அவரை கொலை செய்துவிட்டு விபத்து போல் ஜோடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மயில்சாமியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |