Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் அம்பாசமுத்திரம் சங்க கிளை தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுவதாவது, கடந்த ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கொரோனா காலம் என்று கூறி 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்கினர்.

தற்போது புதிய ஆட்சி காலம் பொறுப்பேற்றுள்ளது. எனவே தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 20 சதவீத போனஸிருந்து தொழிலாளர்களின் பணி சுமை காரணமாக கூடுதலாக 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |