Categories
உலக செய்திகள்

தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக சீனா மீது அமெரிக்கா புகார்..!!

தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி வேலை வாங்குவதாக கோரி சீனாவின் ஐந்து உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

வர்த்தக போர், கொரோனா வைரஸ், தென்சீனக்கடல் விவகாரம், டிக் டாக் செயலிகள் என அமெரிக்கா சீனா இடையிலான மோதல் புது புது வடிவம் எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தொழிலாளர்களை வதைத்து பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இது நவீன அடிமைமுறை என்றும் அமெரிக்கா விமர்சித்திருக்கிறது. தொழிலாளர்களை வதைத்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தங்கள் நாட்டில் விற்கப்படுவதை தடுக்க பருத்தி, தக்காளி, கணினி உபகரணங்கள் உள்ளிட்ட ஐந்து சீன பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. தங்கள் நாட்டு வணிகர்கள், தொழிலாளர்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Categories

Tech |