Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க கேட்குறத செய்யுங்க… பிச்சை எடுக்கும் போராட்டம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டி தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்து என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

அதன் பின் இந்த போராட்டத்தில் முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் பாலா முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |